நடிகை திரிஷா  திருமணம் குறித்து மனம் திறந்தார் 

தமிழ், தெலுங்கு திரையுலகில்   முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,  என் திருமணம் பற்றி முன்பே முடிவு செய்ததைத்தான் இப்போதும் சொல்கிறேன். என்னை முழுமையாக புரிந்து கொள்பவரையே திருமணம் செய்து கொள்வேன்.

அது காதல் திருமணமாகவே இருக்கும்.  அப்படி ஒருவரை சந்திக்கும்போது என் திருமணம் நடக்கும். அதுவரை ‘சிங்கிள்’ ஆக இருப்பது பற்றி கவலைப்படவில்லை.

ஒருவேளை அப்படி ஒருவரை சந்திக்கவில்லை என்றால் இப்படியே இருந்து விடுவேன். அதுபற்றியும் கவலைப்பட மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்