நடிகை கீர்த்தி சுரேஷை இந்த தோற்றத்தில் அவரை பார்த்திருக்கிறீர்களா? வைரலாகும் புகைப்படம்

நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் அவருக்கு தமிழில் பெரிய பட வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.

தெலுங்கு, மலையாளம் படங்களில் தொடர்ந்து அவர் சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தனி கதாநாயகியாக அவர் கலக்கிய மகாநடி படத்திற்கு தேசிய விருதும் பெற்றுவிட்டார்.

அதே வேளையில் அவரின் சில புகைப்படங்களையும் தோற்றங்களையும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விமர்சித்து வருவது தொடர்கதையாகிவருகிறது.

மலையாள பாரம்பரிய பெண் போல தற்போது அவரின் தோற்றம் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மோகன் லாலுடன் அவர் Marakkar: Arabikadalinte Simham என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார் என்பதால் அந்த புகைப்படம் இந்த படத்தை சார்ந்தது என சொல்லப்படுகிறது.

முகநூலில் நாம்