நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்

விஜய் சேதுபதியின் மகளுக்கு ட்விட்டர் பதிவு மூலம் பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிய போதிலும் அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்து ரித்திஷ் என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து சர்ச்சையாக பதிவிடப்பட்டது.

எனினும் விஜய் சேதுபதியின் குடும்பத்தைப்பற்றி சமூகவலைதளத்தில் அவதூறான கருத்துக்களை பரப்பியது தொடர்பாக பல தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், இது குறித்து பல்லாவரத்தை சேர்ந்த லியோ சிவகுமார் என்பவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அதனை தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவதூறாக பேசுதல் ஆபாசமான கருத்துக்களை பதிவிடுதல் , தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் என்ற மூன்று பிரிவின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்