நடிகர் விஜயை  பின்தொடர்ந்தாரகள் ரசிகர்கள் 

தெலங்கானா எம்.பி சந்தோஷ்குமார் 10 கோடி மரக்கன்றுகளை நடும் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற ஒன்றை ஆரம்பித்தார். அந்த சேலஞ்ச் தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் மத்தியிலும் பரவியது. கடந்த சில மாதங்களாகவே பிரபாஸ், நாகார்ஜுனா, சமந்தா, ராஷ்மிகா, ராஷிகண்ணா, அனுபமா பரமேஸ்வரன் என பல பிரபலங்கள் மரக்கன்றுகளை நட்டினர்.  

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மரக்கன்றை நட்டு, ஜுனியர் என்டிஆர், விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோரையும் இந்த சேலஞ்சைத் தொடரச் சொன்னார். அவரது வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய்யும் இரு தினங்களுக்கு முன்பு மரக்கன்று ஒன்றை நட்டினர் 


விஜய் மரக்கன்று நட்டி பிறகு அவருடைய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அது போல் மரக்கன்றுகளை நட ஆரம்பித்துள்ளனர். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அப்படி மரக்கன்றுகளை நட்டு அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என பல்வேறு இடங்களில் உள்ள ரசிகர்களும் இப்படி மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள்.


விஜய் செய்ததைப் போலவே மேலும் பல முன்னணி நடிகர்கள் இப்படி செய்தால் அவர்களுடைய ரசிகர்களும் இப்படி மரக்கன்று நட்டு பசுமையை இந்த பூமியில் மலரச் செய்ய ஒரு வழி பிறக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்