
நடிகை ஷெரின் முதன் முதலில் சில கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்து வந்துள்ளார்.
இதன்பின் தமிழில் விசில், உற்சாகம், பூவா தலையா, நண்பேன்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
ஆனால், இவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
மேலும் நடிகை ஷெரின் நீண்ட நாட்கள் கழித்து தமிழ் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.
ஆனால் இவர் முதன் முதலில் தமிழில் அறிமுகமான படம் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை எனும் படத்தில் தான்.
தற்போது இப்படத்தில் இதுவரை ரசிகர்கள் யாரும் பார்த்திறதா புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது.
இதில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஷெரின் இணைந்த இருக்கிறார்கள். இதோ அந்த புகைப்படம்…