
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘சைரன்’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்கியராஜ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘சைரன்’. இதில் ஜெயம் ரவி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
முக்கியமான வேடத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். எஸ்.கே செல்வகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி படத்தின் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அதன் போது படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் நடிகைகளை பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
ஜெயம் ரவி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ அடுத்த மாதம் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் தயாராகி வரும் ‘அகிலன்’, ‘இறைவன்’ என அடுத்தடுத்த இரண்டு படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.