
நடிகர் சரத் குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நடிகையும், அவரது மனைவியுமான ராதிகா சரத்குமார் ருவிட்டரில் தெரிவிக்கையில், “ஹைதராபாத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் சரத் குமார்.
அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. திறமையான மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவருடைய உடல்நலன் குறித்து வரும் நாட்களில் தகவல் தெரிவிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.