நடமாடும் சேவையை குழப்பியதாக கஜேந்திரன் மீது குற்றச்சாட்டு

தமக்கான சேவையினை குழப்பும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் செ, கஜேந்திரன்தலைமையிலான குழு செயற்பட்டதாக சேவை பெற வந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள்மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஒழுங்கமைப்பில் இன்றையதினம் திங்கட்கிழமை நடமாடும் சேவை நடைபெற்ற நிலையில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர்நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்டவர்களுடன் மாவட்ட செயலககேட்போர் கூடத்தினுள்ளும் நுழைந்து கோஷங்களை எழுப்பினர்.இதனால் நடமாடும் சேவைக்கு சில மணி நேரம் இடையூறு ஏற்பட்ட நிலையில்பொலிஸார் போராட்ட காரர்களை மாநாட்டு மண்டபத்தில் இருந்து வெளியேற்றினர்.அதன் பின்னர் நடமாடும் சேவை இடையூறு இன்றி தொடர்ந்தது. இந்நிலையில் சேவைபெற வந்திருந்தவர் ஒருவர் தெரிவிக்கையில், எமக்கான ஆவணங்களை பெறுவதற்குநாம் கொழும்பு சொல்வதாயின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சுமார் 15ஆயிரம் ரூபாய் வரையில் செலவாகும்.இந்த நிலைமையில், இந்த நடமாடும் சேவை ஊடாக இலகுவாக ஆவணங்களைபெற்றுக்கொள்ள முடியும் என இங்கே வந்திருந்த போது , நாடாளுமன்றஉறுப்பினரின் தலைமையில் சிலர் இங்கு வந்து போராட்டம் செய்தனர்.நீதி அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றில் குரல் கொடுக்க வேண்டியநாடாளுமன்ற உறுப்பினர் , மக்கள் சேவை நடைபெறும் இடத்தில் வந்து அதனைகுழப்பும் முகமாக செயற்பட்டமை எமக்கான சேவைகளை தடுக்கும் நோக்கமாகவே நாம்கருதுகிறோம்.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் , அவர்களுக்கு என்ன நடந்ததுஎன்பதனை வெளிப்படுத்த வேண்டும். இதில் எமக்கு எந்த மாற்று கருத்தும்கிடையாது. எமது உறவினர்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளனர்.அதற்காக அமைச்சர் இல்லாத இடத்தில் மக்கள் சேவை இடம்பெறும் இடத்தினுள்அத்துமீறி நுழைந்து அதனை குழப்பும் செயற்பாடாக நாடாளுமன்ற உறுப்பினர்நடந்து கொண்டமை கண்டனத்திற்கு உரியதாகும் என தெரிவித்தார்.யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் வசித்த நிலையில் மீள நாடுதிருப்பியுள்ளோருக்கு , அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டுபோன்றவற்றை பெறுவதற்கு இலகுவாக இந்த நடமாடும் சேவை நடாத்தப்பட்டமைகுறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்