நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம்வந்த சிவ நாராயணமூர்த்தி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். . வடிவேலு, விவேக் உடன் ஏராளமான படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை பூர்வீகமாக கொண்டவர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ள இவர் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு லோகேஷ், ராம்குமார் என 2 மகன்களும் ஸ்ரீதேவி எனும் மகளும் உள்ளனர். இவரது மனைவி பெயர் புஷ்பவல்லி.இவரது இறுதிச்சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் நாளை மதியம் 02.00 மணிக்கு நடைபெற உள்ளது. சிவநாராயணமூர்த்தியின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்