நக­ருக்குள் புகுந்து அட்­ட­காசம் புரியும் கங்­கா­ருகள் : பொல்­லு­க­ளுடன் நட­மாடும் மக்கள்

அவுஸ்­தி­ரே­லிய நக­ர­மொன்றில் குடி­யி­ருப்புப் பகு­தி­க­ளுக்கு அருகில் கங்­கா­ருகள் புகுந்து மனி­தர்­களை தாக்­கு­வதால், அந்­ந­க­ரி­லுள்ள மக்கள் பீதி­ய­டைந்­துள்­ளனர். 

குயின்ஸ்­லாந்து மாநி­லத்தின் மாரூம் எனும் சிறிய நகரில் அண்­மைக்­கா­ல­மாக கங்­கா­ரு­களின் தாக்­குதல் அதி­க­ரித்­துள்­ள­தாக அங்­குள்ள மக்கள் தெரி­வித்­துள்­ளனர். 

பூங்­காக்கள் போன்ற இடங்­களில் கங்­கா­ருகள் அதிக எண்­ணிக்­கையில் திரி­கின்­றன.

சில­வே­ளை­களில் மனி­தர்­களைக் கண்டால் அவர்­களை கங்­கா­ருகள் தாக்­கு­கின்­றன. அண்­மையில், காங்­காரு நடத்­திய தாக்­கு­தலில் 67 வய­தான பெண்­ணொ­ரு­வரின் கால் முறிந்­துள்­ளது.

இந்­நி­லையில், மக்கள் மாலை­வே­ளையில் நடை­ப­யிற்­சிக்கு செல்­வ­தற்கோ மீன்­பி­டிக்கச் செல்­வ­தற்கோ முடி­யாத நிலையில் உள்­ள­னராம். 

காங்­கா­ரு­களின் தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக உள்ளூர் மக்கள் பொல்­லு­களை ஏந்­தி­ய­வாறு நட­மா­டு­கின்­றனர்.

புற்­களை உண்­ப­தற்­காக கங்­கா­ருகள் வரு­வ­தா­கவும், வீட்டு வளா­கத்­தி­லுள்ள புற்களை முறையாக கத்திரித்து வைத்தி ருந்தால் குறைந்தளவு கங்காருகளே வருவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்