தோள்பட்டை காயத்தால் வெளியேறிய தவான்: பேட்டிங் செய்வாரா?

இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான தவான் பீல்டிங் செய்யும்போது, அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் பீல்டிங் செய்யவில்லை.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு வீரர்களும் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் கவர் திசையில் வேகமாக அடித்த பந்தை தவான் டைவ் அடித்து பிடித்தார். அப்போது இடது கை தோள்பட்டை தரையில் பலமாக மோதியது.

இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக சாஹல் பீல்டிங் செய்து வருகிறார். ஆஸ்திரேலியா 30.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க 167 ரன்கள் அடித்துள்ளது. எப்படி 300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

இந்த சூழ்நிலையில் தவான் பேட்டிங் செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை தவான் களம் இறங்காவிடில் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.

முகநூலில் நாம்