தோட்டத்துக்குள் நுழைந்த கன்றுக்குட்டியை அடித்துக் கொன்று எரித்த படுபாதகன் கைது!

தனது தோட்டத்துக்குள் அத்துமீறி கன்றுக்குட்டி ஒன்று நுழைந்ததால் ஆத்திரமடைந்த தோட்ட உரிமையாளர் அதை அடித்து கொன்று எரித்துள்ள சம்பவம் தெரியவந்துள்ளது.

கன்று கத்தும் சத்தம் கேட்ட அதன் உரிமையாளர், தோட்டத்துக்கு சென்று பார்த்தவேளை கன்றுக்குட்டி எரிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கன்றின் உரிமையாளர் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மின்னேரிய பகுதியில் வசித்து வரும் 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மின்னேரிய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

முகநூலில் நாம்