தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தொழிலுக்காக வெளிநாடு
செல்பவர்களின் எண்ணிக்கை 150 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையில், 2 இலட்சத்து 70
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பினை பெற்று பல நாடுகளுக்கு
சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் குறித்த எண்ணிக்கை 3 இலட்சமாக அதிகரிக்கலாம் என
அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விசேட தகமைகள்
எதனையும் கொள்ளாதவர்கள் என்றும் இதில் 60 சதவீதமானவர்கள் ஆண்கள் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்