தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் மனைவியாக இருக்க மாதம் 25 லட்சம்!

மனைவியாக நடிக்க ரூ.25 லட்சம் சம்பளம் தருவதாக தொழிலதிபர் பேரம் பேசியதாக நடிகை நீது சந்திரா தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை, ஜெயம் ரவியுடன் ஆதி – பகவன் படங்களில் நடித்தவர் நீது சந்திரா. மாதவனுடன் இணைந்து இவர் நடித்த யாவரும் நலம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நீது சந்திரா ஒரு பேட்டியில் ஒரு தொழிலதிபர் தன்னிடம் மனைவியாக இருக்க ரூ.25 லட்சம் தருவதாக தெரிவித்ததார் என கூறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் நான் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தும் வாய்ப்பில்லாமல் இருக்கிறேன் என்றும் எந்த இயக்குநரும் என்னைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தன்னிடம் பேரம் பேசிய தொழில் அதிபர் யார் என்பதை நீது சந்திரா தெரிவிக்க மறுத்துவிட்டார்.

நெவர் பேக் டவுன் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்துள்ள நீது சந்திரா, இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்தம் செய் படத்தில் அமீருடன் இணைந்து இவர் நடனமாடிய கன்னி தீவு பொண்ணா பாடல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்