தொல்பொருட்கள் தொடர்பில் பொதுமக்களை தௌிவுபடுத்த நடவடிக்கை!

தொல்பொருட்களை பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினரை தௌிவூட்டும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொல்பொருள் பெறுமதிமிக்க பகுதிகளை அண்டி வாழும் மக்கள் மற்றும் நிறுவனங்களை தொடர்புபடுத்திக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அமைச்சின் செயலாளர் M.K. பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

புராதன சொத்துகளின் பெறுமதி மற்றும் அதன் தொல்பொருள் பெறுமதி தொடர்பில் பொதுமக்களை தௌிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குருணாகல் தொல்பொருள் கட்டடத்தை புனர்நிர்மாணிக்கும் நடவடிக்கையில் இணைந்துகொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு, இராணுவத்துக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான கடிதத்தின் பிரதி தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் M.K. பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்