தொலைபேசி முற்கொடுபனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய வரி சலுகைகள் அமலுக்கு வந்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க குறித்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையம் கேட்டுள்ளது. புதிய நடைமுறையை மீறி அதிக வரி அறிவிட்டால் அது குறித்து முறைப்பாடு செய்யுமாறு பொது மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

உடனடியாக வரி நிவாரணம் வழங்குவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதற்கமைய முற்கொடுப்பனவு பெக்கேஜ்களின் விலைகளை மாற்றாமல் வரி சலுகைக்கமைய சேவைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட வரிகளை டிசம்பர் மாத பட்டியலில் இருந்து கழிக்காவிட்டால், ஜனவரி மாத பட்டியல் தொகையை குறைக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

முகநூலில் நாம்