தொடரும் எரிபொருள் பதுக்கல்


பங்கீட்டு அடிப்படையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்ற போதிலும் பதுக்கலும் மோசடி வர்த்தகமும் தொடந்து இலங்கை முழுவதும் இடம்பெறுகின்றது.

கடந்த ஒரு வாரமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது. எனினும் வாடகைக்கு ஒரு முச்சக்கர வண்டியைக் கூட பொது இடங்களில் காணமுடியவில்லை.


தனியார் சிற்றூர்திகளுக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான டிப்போக்கள் மூலமாக எரிபொருள் விநியோகிக்கப்படுகின்ற போதிலும் அவற்றில் பல பொதுப் போக்குவரத்தில் ஈடுபடவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பெற்றுக்கொள்ளும் எரிபொருட்கள் கறுப்புச் சந்தையில் விற்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்