தொடரும் அரச பேருந்துகளின் விபத்து! பீதியின் மத்தியில் பயணம் செய்யும் மக்கள்

இன்று காலை இடம்பெற்று அரச பேருந்து விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

எல்பிடிய – அலுத்கம பிரதான வீதியின் படுவத்த பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எல்பிடியவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் உந்துருளி ஒன்று நேருக்கு நேர் மோதுண்டதன் காரணமாக மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த 40 வயதுடைய நபரொருவரே பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பசறையில் இடம்பெற்ற அரச பேருந்து விபத்தில் 13 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்