தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பொதுத்தேர்தல் பிற்போடப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஆணைக்குழுவிற்குள்ள அதிகாரத்திற்கு அமைய, தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி நலின் பண்டார, பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஆகியோரின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 25 ஆம் திகதியிலிருந்து 14 நாட்கள் வரை பொதுத்தேர்தலை நடத்த முடியாது எனவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

பொதுத்தேர்தலுக்கான திகதி தொடர்பில் விரைவில் வர்த்தமானியூடாக அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

முகநூலில் நாம்