தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்ட வேட்பாளர்!

இந்தியாவின் பீகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனதாதள ராஷ்ட்ரவாடி கட்சி வேட்பாளர் ஸ்ரீநாராயன் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் வருகிற 28- ஆம் திகதி முதல் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதற்காக மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு உள்ளன.

அங்குள்ள ஷியோகர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஷியோகர் தொகுதியில் ஜனதாதள ராஷ்ட்ரவாடி கட்சி சார்பில் ஸ்ரீநாராயன் சிங் என்பவர் களத்தில் இருந்தார்.

அங்கு நவம்பர் 3-ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில், இவர் தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார்.

அந்தவகையில் நேற்று அந்த தொகுதிக்கு உட்பட்ட ஹத்சார் கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் திடீரென ஸ்ரீநாராயன் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர்.

இதில் ஸ்ரீநாராயன் சிங் மற்றும் 2 பேர் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தனர்.

3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், ஸ்ரீநாராயன் சிங் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்