
தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் தொடர்பில்
கலந்துரையாடுவதற்காக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இன்று(18)
பிற்பகல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன
தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இந்த விசேட கட்சித் தலைவர்கள்
கூட்டம் நடைபெறவுள்ளது.
கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று(18) பிற்பகல் நடைபெறவிருந்த
பாராளுமன்ற விவகாரங்களுக்கான தெரிவுக்குழு கூட்டம் இரத்து செய்யப்பட்டதை
அடுத்தே, இந்த விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.