தேர்தல் சட்டமீறல்கள் குறித்து அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

தேர்தல் சட்டங்களை மீறும் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு மாகாண மட்டத்தில் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தலை நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் நடத்துவதை நோக்காக கொண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில்,

மேல் மாகாணத்திற்காக 011 2869697 அல்லது 011 2869674
* மத்திய மாகாணத்திற்காக 011 2869721
* தென் மாகாணத்திற்கு 011 2869682
* வட மாகாணத்திற்காக 011 2869694
* கிழக்கு மாகாணத்திற்காக 011 2869709
* வட மேல் மாகாணத்திற்காக 011 2869727
* வட மத்திய மாகாணத்திற்கு 011 2869663
* ஊவா மாகாணத்திற்காக 011 2869712
* சப்ரகமுவ மாகாணத்திற்காக 011 2869713
ஆகிய தொலைபேசி இலக்கங்கள், முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்