தேர்தலை நடத்துவதா..? இல்லையா..? சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட தகவல்!

நாட்டில் கொவிட்-19 தொற்றின் தாக்கம் தேர்தலை நடாத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எமது செய்தி பிரிவு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தற்போது வரையில் கந்தக்காடு மற்றும் சேனபுர புனர்வாழ்வு மையங்களில் 428 கைதிகளுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் அங்குள்ள பணிக்குழுவை சேர்ந்த 44 பேருக்கும் இதுவரை கொரோனா தொற்றுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத்துறையினருடன் இணைந்து இராணுவத்தினர் அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

முன்னர் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

எனினும் தற்போது அவ்வாறானதொரு நிலையில்லை.

ஆகவே இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தலை நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் சுகாதார தரப்பினருக்கும் முன்னதாக இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆலோசனை வழிகாட்டி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வேட்பாளர்கள் செயற்படுவார்களாயின் குறித்த தேர்தலை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்