
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்க
எதிர்க்கட்சிகள் நேற்று ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளன.
அதன்படி ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் உள்ள 16
பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் தேர்தல்கள்
ஆணைக்குழுவுக்குச் சென்றன.
இதன்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு கோரி கடிதம்
ஒன்றையும் எதிர்கட்சியினர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இந்தக் குழுவினர்
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.