
தேர்தலுக்கான செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்திற்கு எதிராக இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதம
கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாடாளுமன்றில்
விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தொடர்பில்
கலந்துரையாடுவதற்காக நேற்று பிற்பகல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில்
விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது, குறித்த சட்டமூலத்தினை இன்றைய தினம் நாடாளுமன்றில்
விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே குறித்த சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபடவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல
தெரிவித்துள்ளார்