தேர்தலில் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் எப்போது வெளியாகும்..?

அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு விசேட தினமாக ஜூலை 31ஆம் திகதி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகளை ஓகஸ்ட் 6ஆம் திகதி பிற்பகல் வேளையில் வழங்க முடியுமென எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிததுள்ளார்.

முகநூலில் நாம்