
பயணத்தடை ஊடாக நீதிமன்றம் பிணை வழங்கிய ,பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன்
தொடர்புடைய கஞ்சிபான இம்ரான் சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு
தப்பிச் சென்றுள்ளார். இவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதை இந்திய
புலனாய்வுப்பிரிவு அறிவிக்கும் வரை எமது நாட்டு புலனாய்வுப் பிரிவு
அறிந்திருக்கவில்லை என அரச தரப்பு எம்.பியான மதுர விதானகே
தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை இந்திய புலனாய்வுப் பிரிவினரே
முன்கூட்டியதாக அறிவித்தனர்.ஆகவே கஞ்சிபான இம்ரான் நாட்டை விட்டு தப்பிச்
சென்றதையிட்டு தேசிய புலனாய்வுப்பிரிவின் திறன்நிலை
வெளிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு தப்பிச் சென்ற கஞ்சிபான இம்ரானை தேடி வெளிநாடுகளுக்கு
புலனாய்வுப்பிரிவு அல்லது பாதுகாப்பு தரப்பினர் செல்வது நாட்டுக்கு
பிறிதொரு கறுப்பு புள்ளியாக அமைவதுடன் மக்களின் வரிப் பணத்தை வீண்
விரயமாக்கும் செயற்பாடாகவே இருக்கும்.
ஆகவே கஞ்சிபான இம்ரான் நாட்டை விட்டு வெளியேறும் அளவிற்கு
அலட்சியப்போக்குடன் செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க
வேண்டும். கஞ்சிபான இம்ரான் விவகாரத்தில் தேசிய
புலனாய்வுப்பிரிவு,பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்பின்
செயற்பாடுகளுக்கு இந்த உயரிய சபை ஊடாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்திக்
கொள்கிறேன் என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின்
உடைமைகளை மீளப்பெறுதல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே
இவ்வாறு தெரிவித்திருந்தார்