
தேசிய பரீட்சைகளின்போது மின்வெட்டை தடுக்கும் வகையில் இலங்கை மின்சார சபை
மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இலங்கை
ஆசிரியர் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மனுவை எதிர்வரும்
ஜூலை மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரியந்த ஜயவர்தன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர்
அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு இன்று (பெப்
06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை ஜூலை 14ஆம் திகதி
பரிசீலிக்க தீர்மானித்துள்ளது.
குறித்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர்
நாயகத்துக்கு அழைப்பாணை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை
ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த மனுவை தாக்கல்
செய்துள்ளார்.
news 06
சீன வங்கி வழங்கியுள்ள உத்தரவாதம் போதுமானதல்ல – அலி சப்ரி
சீனாவின் எக்சிம் வங்கி வழங்கிய உத்தரவாதங்கள் சர்வதேச நாணயநிதியத்தின்
நிதி உதவியை இலங்கை பெற்றுக்கொள்வதற்கு போதுமானவையில்லை என தெரிவித்துள்ள
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சர்வதேச நாணயநிதியம் எதிர்பார்ப்பதற்கும்
சீனா வழங்கியுள்ளமைக்கும் இடையில் இடைவெளியுள்ளது எனவும்
குறிப்பிட்டுள்ளார்.
அல்ஜசீராவிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் 2.9
பில்லியன் கடனுதவியை இலங்கைக்கு வழங்குவதற்காக சர்வதேச நாணயநிதியம்
எதிர்பார்க்கின்ற உத்தரவாதத்தினை கருத்தில் கொள்ளும் சீனாவின் வங்கி
குறைவாகவே வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இது இரண்டுவிதமான நிலைப்பாடுகள் சீனர்கள் ஏதோ சொல்கி;ன்றார்கள் ஆனால்
சர்வதேச நாணயநிதியம் வித்தியாசமான முயற்சியை விரும்புகின்றது எனவும்
அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
மார்ச் 31 ம் திகதிக்கு முன்னர் சீனாவின் உத்தரவாதமும் சர்வதேச
நாணயநிதியத்தின் அனுமதியும் கிடைப்பது அவசியம் என தெரிவித்துள்ள
வெளிவிவகார அமைச்சர் இல்லாவிட்டால் நிலைமை மோசமடையலாம் என
சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும்அரசாங்கம் சீர்திருத்தங்களை தொடர்ந்தால் இலங்கை மக்கள் அமைப்பு
முறை மீது தொடர்ந்தும் நம்பிக்கையை வெளிப்படுத்தினால் வங்கிகள் ஊடகாக
பணபரிவர்த்தனையில் ஈடுபட்டால் மார்ச் 31ம் திகதிக்கு பின்னர்
தட்டுப்பாடுகள் உருவாகலாம் என தான் கருதவில்லை எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
வருமான சேகரிப்பு மற்றும் ஏனைய சீர்திருத்தங்கள் குறித்து தான் விதித்த
முன்நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் விதம் குறித்து சர்வதேச
நாணயம் திருப்தியடைந்துள்ளது எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.