
கடந்தவாரம் தேசிய கலை இலக்கிய பேரவை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் நூறு மலர்கள் மலரட்டும் புத்தக அரங்க விழாவினையும், கண்காட்சி மற்றும் விற்பனையும் நடாத்தியிருந்தது. நீண்ட காலத்திற்கு பின்னர் கிளிநொச்சியில் இடம்பெற்ற இந் நிகழ்வு இலக்கியவாதிகள், படைப்பாளி
மற்றும் வாசகர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிகழ்வில் நூல்களின் களத்த்திலும், புலத்திலும் இருந்த வெளிவந்த பல படைப்பாளிகளின் நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. நூல்கள் விசேட விலைக் கழிவில் விற்ப்பனை செய்யப்பட்டது, அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றது. அத்தோடு
கருத்துப் பரிமாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையில் முதலாவது நாளில் பேராசிரியர் சிவசேகரம் அவர்களின் சிவசேகரம் கவிதைகள் நூல் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. தாயகம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தேசிய கலை இலக்கிய பேரவையின் தலைவருமான க.தணிகாசலம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நூல் அறிமுகத்தை கவிஞர் கருணாகரனும்,கருத்துரையினை சட்டத்தரணி சோ. தேவராஜாவும் வழங்கினார்கள். நிகழ்ச்சியை ஆசிரியர் த. ஸ்ரீபிரகாஸ் தொகுத்து வழங்கினார்.
இதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நாடக அரங்க கல்லூரியின் தயாரிப்பில் குழந்தை மா. சண்முகலிங்கம் அவர்களின் மொழிபெயர்ப்பில் பேராசிரியர் க.ரதிகரன் அவர்களுடைய நெறியாள்கையில் உருவான அன்ரன் செகோவின் தான் விரும்பாத தியாகி நாடகமும், சண் நாடக குழுவினரின் தயாரிப்பில் பு.கணேசராஜாவின் எழுத்து நெறியாள்கையில் உருவான தலை எழுத்து நாடகமும் அரங்கேற்ப்பட்டன.
அத்தோடு நூல்களின் விற்பனை அரங்கும் இடம்பெற்றது.
இரண்டாவது நாள் நிகழ்வில் சனிக் கிழமை நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் அ. கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இதன் போது ஐந்து நூல்களின் அறிமுகம் நடைப்பெற்றத. கவிஞர் கருணாகரனின் கடவுள் என்பது துரோகியாயிருத்தல் என்ற நூலினை எழுத்தாளர் ச.சிந்தாந்தன் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து. அவுஸ்ரேலவியா தெய்வீகனின் உன் கடவுளிடம் போ நுலினை யாழ் பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன் அறிமுகம் செய்து உரையாற்றினார்
மேலும் தமிழ்க்கவியின் நரையன் நூலினை ஆசிரியர் ப. தயாளன் அறிமுகம் செய்து உரையாற்றினார். தொடர்ந்து இராஜேஸ்கண்ணனின் கிராமத்து மனிதர்கள் நூல்
தொடர்பில் எழுத்தாளர் தமிழ்க்கவி உரையாற்றினார். அடுத்து சிந்தாந்தனின் அம்ருதாவின் புதிர் வட்டங்கள் நூலினை கலாநிதி சு.குணேஸ்வரன் அறிமுகம் செய்து உரையாற்றினார். நிகழ்ச்சியினை ஆய்வாளர் சத்தியதேவன் தொகுத்து வழங்கினார்.
மூன்றாவது நாள் நிகழ்வாக காலை 10 மணிக்கு ஆசிரியர் விஜயசேகரம் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. நிகிழ்வினை கலாசார உத்தியோகத்தர் ச. தனுஜன் தொகுத்து வழங்கினார். நூல் அறிமுக நிகழ்வில் அலெக்ஸ் பரந்தாமனின் ஒரு பிடி அரிசி நுலினை கவிஞர் திருநகரூர் ஜெகா அறிமுகம் செய்து உரையாற்றினார். தொடர்ந்து சாந்தனின் சித்தம் சரிதம் நூலினை எழுத்தாளர்
மு. அநாதரட்சகன் அறிமுகம் செய்து உரையாற்றினார். பின்னர் அருட்தந்தை அன்புராசா அவர்களின் கொரோனா ஊரடங்கும் நானும் என்னூர் நாய்களும் என்ற நூலினை ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் அறிமுகம் செய்து உரையாற்றினார்.
இறுதியாக கவிஞர் தீபச்செல்வனின் நடுகல் நூலினை எழுத்தாளர் கனகபாரதி செந்தூரன் அறிமுகம் செய்து உரையாற்றினார். தொடர்ந்து கருத்தாடல்களுடன் இடம்பெற்றது நிகழ்வுகள் நிறைவுப்பெற்றது.
தேசிய கலை இலக்கிய பேரவையினர் அர்ப்பணிப்புடன் தங்களது பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். கிளிநொச்சியில் நிகழ்வுகளை நடாத்துவதற்கு பலரும் தங்களது ஒத்துழைப்பினை வழங்கியிருந்தார்கள். பெரியளவில் மக்களை திரட்டி
நிகழ்வுகள் இடம்பெறவில்லை எனினும் ஒரு ஆரோக்கியமான காலத்தின் தேவை கருத்திய நிகழ்வாக நடைப்பெற்று நிறைவுற்றமை நிறைவே.











