
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையானது கொழும்பில் இரண்டு இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் எரிபொருள் வழங்கப்படும் என கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மற்றுமொரு பெற்றோல் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதோடு அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.