தேசிய அடையாள அட்டை விநியோகம்-குறுந்தகவல் சேவை அறிமுகம்

தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பது தொடர்பில் குறுந்தகவல் சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டதன் பின்னர் , அவை தொடர்பில் அறிவிப்பதற்காக குறுந்தகவல் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்தார்.

அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இத்திட்டத்தின் ஊடாக , தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வருகை தருவோர் தமது நேரத்தை மீதப்படுத்திக்கொள்ள முடியுமெனவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க மேலும் தெரிவித்தார்.

முகநூலில் நாம்