
தேசியப்பட்டியலில் ஆதிவாசி பிரதிநிதியொருவர் பாராளுமன்றத்துக்குநியமிக்கப்பட வேண்டுமென வேடுவத் தலைவர் உருவரிகே வன்னியலத்தோவலியுறுத்தியுள்ளார்.பதுளை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவைஆகிய மாவட்டங்களில் 500,000 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் உள்ளனர்.அவுஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியினர் பாராளுமன்றத்தில்பிரதிநிதித்துவப்படுத் தப்பட்டதாகவும், நேபாளத்தில் பழங்குடியினர் உயர்பதவிகளை வகித்து வருவதாகவும் அவர் கூறினார்.தம்பானையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், “எமது நாட்டில் முதல் தடவையாக பிரதேச சபைஉறுப்பினராக பூர்வீக பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர்என் மருமகள், ஹென்னானிகலவில் வசிக்கிறார். இந்த நாட்டின் முதல் மற்றும்பழைமையான சொந்தக்காரர்கள் என்ற சிறப்பைப் பெற்றுள்ள எமது மக்களுக்குபாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் இல்லை என நான் வெகு காலமாகபேசிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துவிவாதிக்க அரசுக்கு ஒரு முன்மொழிவும் முன்வைக்கப்பட்டது. ஓரிருவாரங்களுக்குப் பிறகு, இது தொடர்பாக விவாதங்கள் நடந்தன. ஆனால் பின்னர்மறதியில் மங்கிப்போனது” என்றார்.