
தென்னிந்தியாவின் பிரபல பாடகர் பாம்பா பாக்யா (வயது 49) காலமானார்.
சுகயீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான இராவணன் திரைப்படத்தில், பாம்பா பாக்யா தமிழில் பாடகராக அறிமுகமானார்.
இதனை, தொடர்ந்து, ரஹ்மானின் இசையில், 2.O, பிகில், சர்கார், பொன்னியின் செல்வன் -1 உள்ளிட்ட படங்களில் பல பாடல்களை பாடி குறுகிய காலத்தில் பிரபலமானார்.
அண்மையில் வெளியான, பொன்னியின் செல்வன் -1 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “பொன்நதி…” பாடலை ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து அவர் பாடியிருந்தார்.