தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கட்டுநாயக்கவில் பிறந்தநாள் கொண்டாட்டம்

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டை நோக்காகக் கொண்டுதொன்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா மற்றும் ஜனாதிபதி ரணில்விக்கரமசிங்க இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.இந்தோனேசியாவில் இடம்பெற்ற G20 மாநாட்டில் பங்கேற்ற பின்னர் மீண்டும்தமது நாட்டிற்கு திரும்பும் வழியில் குறுகிய கால விஜயம் மேற்கொண்டுதென்னாபிரிக்க ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தென்னாபிரிக்கஜனாதிபதி சிறில் ரமபோசாவை வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி வரவேற்றார்.இதன் பின்னர் இரு நாட்டு ஜனாதிபதிகளும் கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் சந்தித்துள்ளனர்நீடித்த நல்லிணக்கத்திற்காக நம்பகத்தன்மையுடன் கூடிய உண்மையைக்கண்டறியும் பொறிமுறையை நிறுவுவதற்கு தென்னாபிரிக்காவின் ஒத்துழைப்பைப்பெறுவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.அத்தோடு நேற்று (17) தனது 70 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும்தென்னாபிரிக்க ஜனாதிபதிக்காக இந்த சந்திப்பின்போது பிறந்தநாள் கொண்டாட்டநிகழ்வொன்றும் நடைபெற்றமை விசேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்