தென்னாபிரிக்கா ரி-20 யில்  இலங்கை அணியின் 10 வீரர்கள் இடம்பிடிப்பு!

தென்னாபிரிக்காவில் அடுத்த ஆண்டு முதல்முறையாக நடைபெறவுள்ள ரி-20 கிரிக்கெட் தொடருக்கான 30 முதன்மை வீரர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த முதன்மை வீரர்கள் பட்டியலில், 11 இங்கிலாந்து வீரர்கள் மற்றும் இலங்கையில் இருந்து 10 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். எதிர்பார்த்தபடி, பாகிஸ்தானியர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லை.

ஜோஸ் பட்லர், மொயீன் அலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், குயின்டன் டி கொக், டேவிட் மில்லர், இயோன் மோர்கன், ஜேசன் ஹோல்டர், ஜேசன் ரோய் உள்ளிட்டோர் இந்த தொடரில் பங்கேற்கின்றனர்.

இதில் இலங்கை அணி சார்பில், மஹீஷ் தீக்ஷன, மதீஷ பதிரண, தனன்ஜய லக்ஷான் நிரோஷன் டிக்வெல்ல, சீகுகே பிரசன்ன, துஷ்மந்த சமீர, சாமிக்க கருணாரத்ன, நுவான் பிரதீப், அகில தனன்ஜய விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இந்த தொடரில் அணிகள் தலா 17 வீரர்களை இணைத்துக்கொள்ள முடியும்.

இதில் தென்னாபிரிக்காவின் புதுமுக வீரர் ஒருவரும் இடம்பெறவேண்டும் என்பதுடன், ஒரு அணி விளையாடும் போது நான்கு வெளிநாட்டு வீரர்களை தங்களுடைய அணிகளில் இணைத்துக்கொள்ள முடியும்.

குறிப்பாக தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், இந்த ஆறு அணிகளையும் ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். மும்பை இந்தியன்ஸ், சென்னை சுபர் கிங்ஸ், லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்வாகங்கள் இந்த அணிகளை வாங்கியுள்ளன.

மேலும், லிவிங்ஸ்டன் மற்றும் பட்லர் ஆகியோர் தலா 500,000 அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மொயின் அலி 400,000 அமெரிக்க டொலர்களுக்கும் டு பிளெஸ்ஸிஸ் 350,000 அமெரிக்க டொலர்களுக்கும் மற்றும் ரபாடா, டி கொக், மில்லர், மோர்கன் மற்றும் கர்ரன் ஆகியோர் தலா 300,000 அமெரிக்க டொலர்களுக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ள, கேப்டவுண் அணிக்காக விளையாடுவதற்கு ரஷித்கான், லிவிங்ஸ்டன், சேம் கர்ரன், பிரிவிஸ் மற்றும் ரபாடா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ள, ஜோகன்னஸ்பர்க் அணிக்காக விளையாடுவதற்கு டு பிளெஸிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மொயீன் அலியும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளதாக தெரிகின்றது.

டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு சொந்தமான பிரிட்டோரியா அணியில், ஹெய்டன் மார்க்ரம் மற்றும் ஹென்ரிச் நோட்ஜே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜோஸ் பட்லரை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு சொந்தமான பார்ல் அணி தக்கவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்