தென்கொரியா 54, பிரான்ஸ் 33, ஜப்பான் 16 உயிரிழப்புகள் – கோரத்தாண்டம் ஆடும் கொரோனா

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 100-க்கும் அதிகமான நாடுகளில் பரவி 4 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உலகம் முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது.

 இந்நிலையில், தென்கொரியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 7 ஆயிரத்து 513 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
ஐரோப்பிய நாடான பிரான்சில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரத்து 784 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஜப்பான் நாட்டில் கொரோனாவுக்கு 16 பேர் பலியாகியுள்ளனர். 510 பேருக்கு வைரஸ் பரவி உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


முகநூலில் நாம்