தென்கொரியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.


சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவில் மட்டும் 2 ஆயிரத்து 981 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் 80 ஆயிரத்து 270 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவை தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 


தென்கொரியாவில் வைரஸ் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 5 ஆயிரத்து 328 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


இதற்கிடையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகமும் முழுவதும் 3 ஆயிரத்து 100 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாகவும், 91 ஆயிரத்து 700 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்