தென்கொரியாவில் உயிரிழந்த இலங்கையர் இனம்காணப்பட்டார்

தென்கொரிய தலைநகர் சியோலில் ஹலோவீன் நிகழ்வின் போது சனநெரிசல் காரணமாக
ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்குண்டு இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கண்டியை சேர்ந்த நபர் ஒருவர்
உயிரிழந்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்கொரிய நெரிசல் சம்பவத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சுமார்
160 பேர்களில் இலங்கை கண்டி, உடதலவின்ன பகுதியை சேர்ந்த நபர்
ஒருவருமாவார்.

27 வயதுடைய இளம் குடும்பஸ்தரான முஹமட் ஜினாத் அண்மையில் திருமணம் செய்து
கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்