துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்; ஒருவர் கைது!

மாத்தறை – வெலிகம, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்துக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (30) காலை 7.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை அடுத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகநூலில் நாம்