துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயம்

வவுனியா – ஈச்சங்குளம் சொலமன் பகுதியில் நேற்று (01) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் காயமடைந்துள்ளார்.

குறித்த பெண் தனது வீட்டின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா கல்மடுவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான பெண்ணே காயமடைந்தவராவார். துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்