துப்பாக்கிச் சூடு சந்தேக நபர்கள் கைது

அண்மையில் மித்தெனியவில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் ரி-56 ரக துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி தனிப்பட்ட தகராறு காரணமாக மலர்சாலை உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய மற்றுமொருவரையும் தங்காலை குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து கொலையை செய்ய கூலியாகப் பெற்ற 500,000 ரூபாய் மற்றும் அதன் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட அலைபேசியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் 35 மற்றும் 28 வயதுடைய விதாரந்தெனிய மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை இன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்