துபாய் மற்றும் இலங்கைக்கான விமானப்பயணங்கள் ரத்து!

இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ப்ளெய் டுபாய் நிறுவனம் இலங்கைக்கான அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

அதன்படி, ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை துபாய் மற்றும் இலங்கைக்கான விமானப்பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ரத்துச் செய்யப்பட்டுள்ள விமானப் பயணங்களின் விமானப் பயணச் சீட்டுக்களுக்கான பணம் மீண்டும் பயணிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்