
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் மத்திய பிரிவு பகுதியில் உள்ள மானா தோப்பிற்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீயினால் மூன்று ஏக்கர் மானா தோப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு (03) இரவு 10 மணிக்கு இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தீ வைக்கபட்ட சம்பவத்தை அறிந்த பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட மத்திய பிரிவு மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சுமார் மூன்று மணித்தியாலங்கள் போராடி குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் அதிக வெப்பம் காரணமாக இனந்தெரியாதவர்களால் வைக்கபடுகின்ற தீயினால் குறித்த பகுதியில் குடி நீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.