
அதிவேக வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்றிரவு(06) வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.