திருகோணமலை காட்டுப் பகுதியில் ஐந்து கைக்குண்டுகள் மீட்பு

திருகோணமலை-சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப் பகுதியில் ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கைக்குண்டுஙள் நேற்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சேருவில இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் மீட்கப்பட்ட கைக்குண்டுகளை திருகோணமலை சர்தாபுர விஷேட பொலிஸ் அதிரடி படையினர் செயலிழக்கச் செய்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இக் கைக்குண்டுகள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட எஸ்.எப்.87 வர்க்கத்தை சேர்ந்தது எனவும் சேருவில பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்