திருகோணமலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

திருகோணமலை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புல்மோட்டை தொடக்கம் திருகோணமலை வரையிலான கரையோர பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக வீசி வரும் காற்றின் வேகத்தின் அதிகரிப்பினாலும், நீரோட்டத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும் மீன்பிடி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதனாலும், தோணிகளை கரையேற்றுவதற்கும் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முகநூலில் நாம்