தியேட்டர்கள் மூடல்! முதலமைச்சர் உத்தரவு – கொரோனா வைரஸ் எதிரொலி

உலகம் முழுக்க அனைத்து மக்களையும் நாட்டு அரசையும் மிகவும் பீதியில் ஆழ்த்தியுள்ள விசயம் கொரோனா வைரஸ் தாக்குதல். சீனாவில் பரவ தொடங்கிய இந்த நோயால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இந்நோய் பல நாடுகளில் பரவி வருகிறது.

இதற்காக பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளன. இந்தியாவின் சில மாநிலங்களில் சிலருக்கு நோய் தொற்று இருப்பதாக கூறி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இதன் எதிரொலியாக சினிமா வட்டாரத்திலும் பிரதிபலிக்க தொடங்கியுள்ளது. கேரளாவில் வரும் மார்ச் 31 வரை தியேட்டர்களை மூடுமாறு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஜேம்ஸ் பாண்ட் படத்தின் அடுத்த பாகமான நோ டைம் நோ டு டை படம் உலகளவில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலையாள நடிகர் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாக இருந்த மரைக்காயர் படம் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.

முகநூலில் நாம்