திமிங்கிலத்தை கடலுக்கு விடுவிக்கப்படும் முன் பல நாட்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தீர்மானம்

பிரான்ஸின் செயின் ஆற்றில் சிக்கிய பெலுகா திமிங்கிலத்தை காப்பற்றும் நடவடிக்கையின் முதல் கட்டமாக அந்த திமிங்கிலம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

13 அடி நீளமான இந்தத் திமிங்கிலம் வழக்கமாக அதிக குளிரான ஆர்டிக் நீரிலேயே காணப்படுகிறது. ஆங்கில நீரிணை வழியாக பாரிஸ் ஆற்றுக்குள் நுழைந்த இந்தத் திமிங்கிலம் கடந்த ஒரு வாரமாக அங்கு சிக்கிக்கொண்டது.

இந்நிலையில் பாரந்தூக்கியுடன் இணைக்கப்பட்ட வலையைக் கொண்டு மீட்புப்பணிக் குழு 800 கிலோகிராம் எடையிலான அந்தத் திமிங்கிலத்தை ஆற்றில் இருந்து வெளியேற்றியது.

மீட்புத் திட்டத்தின் அடுத்த கட்டமாகத் திமிங்கிலம் குளிர்சாதன வாகனத்தில் ஏற்றப்பட்டுக் கடலின் கரையோரத்துக்குக் கொண்டுசெல்லப்படும் என்று இயூரே மாநில பொதுச் செயலாளர் இசபெல் டோர்லியாட்–போஸே தெரிவித்தார்.

இந்தத் திமிங்கிலம் திறந்த கடலுக்கு விடுவிக்கப்படும் முன் பல நாட்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மீட்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்