
மன்னார் -தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நேற்று (11) காலை முதல் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு விநியோகிக்கப்பட்ட எரிபொருள் விநியோகத்தில் திடீர் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
திடீர் மின் துண்டிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருந்தது. அத்துடன், எரிபொருள் விநியோக இயந்திரம் வெப்பம் அடைந்திருந்தது.
எனினும் குறித்த தடங்கள் நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில் இன்று (12) காலை முதல் தடைப்பட்டுள்ள கிராமங்களுக்கான எரிபொருள் விநியோகம் மேற்கொள்ள துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேசச் செயலாளர் தெரிவித்துள்ளார்.