தாய்வானின் வான்பகுதில் அத்துமீறி 38 சீன இராணுவ ஜெட் விமானங்கள் நுழைவு

தாய்வான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் 38 சீன இராணுவ ஜெட் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது இன்றுவரை பெய்ஜிங்கின் மிகப்பெரிய ஊடுருவல் என விபரிக்கப்படுகின்றது.

அணுசக்தி திறன் கொண்ட வெடிகுண்டுகள் தாங்கும் விமானம் உட்பட பல போர் விமானங்கள் தங்களது வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் இரண்டு முறை நுழைந்தது என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த தாய்வான், அதன் ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தி இருந்தது.

சீனா, தாய்வானை பிரிந்த மாகாணமாக பார்க்கிறது ஆனால் தாய்வான் தன்னை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக பார்க்கிறது.
தாய்வான் சீனாவின் விமானப்படையின் தொடர்ச்சியான பணிகள் குறித்து ஒரு வருடத்திற்கும் மேலாக புகார் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தாய்வான் பிரதமர் “சு செங்-சாங்” கூறுகையில், சீனா இராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது இது பிராந்திய அமைதியை சேதப்படுத்தும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்